புல்லூர் தடுப்பணையில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு

விநாயகர் சிலை கரைத்தபோது புல்லூர் தடுப்பணையில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.;

Update:2023-09-21 23:47 IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாயப்பர் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் முரளி (வயது 23). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக சென்றார். பின்னர் சிலையை கரைத்து விட்டு அருகில் உள்ள ஆழமான பகுதியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இவரை தேடும் பணியில் குப்பம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை அவரது உடல் கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் முரளியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்