ஓடையில் வாலிபர் பிணம்
பழனி அருகே ஓடையில் அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பழனி பைப்ரோடு பகுதியில் உள்ள ஓடையில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடப்பதாக பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் பழனி மருத்துவர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான காளிதாஸ் (வயது 36) என்பது தெரியவந்தது. ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.