தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்

நெமிலியில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

Update: 2023-05-13 11:12 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட மூலப்பட்டு கிராமம் காந்தி சாலையில் வசித்து வருபவர் பழனி என்பவரின் மகன் அன்பு (வயத 25), இஸ்திரி தொழில் செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், நிதிஷ், சாம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

அன்பு, நெமிலி தட்டார தெருவில் தன் குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நந்தினி அம்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது மாடி படிக்கட்டில் ரத்தம் வழிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, தூக்கில் தொங்கியபடி கிடந்த அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்