மொரப்பூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் பெண் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2023-02-15 18:45 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் தென்பெண்ணை ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சாமாண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மாலதி மற்றும் மொரப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் பிணமாக கிடந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்