காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் நெரிஞ்சிப்பேட்டை-பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து தொடக்கம்

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் நெரிஞ்சிப்பேட்டை-பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து தொடக்கம்;

Update: 2022-08-18 21:15 GMT

அம்மாபேட்டை

மேட்டூர் அணைக்கு கடந்த 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் ஜூலை 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வெள்ள அபாயம் நிலவியதால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆற்றில் 12 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை பாலம் வழியாக பயணிகள் 8 கிலோமீட்டர் சுற்றிச் சென்று வந்தனர். தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்