கன மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரமேஷ் என்ற மீனவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதை அறிந்த அமைச்சர் மெய்யநாதன் துறைமுகத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பூம்புகார் ரவி, சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் உள்ள படகு தளத்தில் பூம்புகாரை சேர்ந்த சண்முகம் என்பவருடைய விசைப்படகு நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சூறாவளி காற்று வீசியதால் அவருடைய விசைப்படகும் கடலில் மூழ்கியது.