ரத்ததான முகாம்

அரக்கோணத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;

Update: 2023-07-01 17:54 GMT

ராணிப்பேட்டை, 

அரக்கோணம் ரோட்டரி சங்கம், அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தின. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெ.மணிகண்டன், செயலாளர் பி.மனோகர் பிரபு ஆகியோர் தலைமை தாங்கினர்.

ரோட்டரி சங்க பொருளாளர் டி.லட்சுமிபதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி சங்க முன்னாள் ஆளுனர் பி.டி.ஜி. சி.ஆர். சந்திரபோப் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும சேர்மன் டாக்டர். டி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

நாராயணி மருத்துவமனை டாக்டர் குபேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். முகாமில் மாணவர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு 114 யூனிட் ரத்தம் தானம் செய்தனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜி.மணி, சந்துரு, குணசீலன், ஆர்.வெங்கட்ராமன், ஆர்.பி.ராஜா, நரேந்திர குமார், வி.வினோத் குமார், பிரதீப், எம்.எஸ். மான்மல், டி.கமலகண்ணன், சிவசுப்பிரமணிய ராஜா, ஜி.கே.வெங்கடேசன், வடிவேலன், பிரகாஷ், சீனிவாசன், கஜபதி, விகாஸ் ஜெயின், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்