ரத்ததான முகாம்
கெலமங்கலத்தில், பா.ஜனதா சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.;
ராயக்கோட்டை:
கெலமங்கலத்தில் பா.ஜனதா கட்சி சார்பில், அங்குள்ள சமுதாய கூடத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சுமார் 60-க்கும் மேற்பட்ட இளைஞர் கலந்துக்கொண்டு ரத்ததானம் வழங்கினார்.. இதில் மாவட்ட பொருளாளர் சீனிவாஷ், ஜெக்கேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார், ஒன்றிய தலைவர் சந்துரு, செயலாளர் ரூபாஸ்ரீ, நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.