தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் குருதி கொடையாளர் தின விழா; கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் குருதி கொடையாளர் தின விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.;

Update: 2023-06-14 18:45 GMT

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் உலக குருதி கொடையாளர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா தலைமை தாங்கினார். துணை இயக்குனர் டாக்டர் முரளிதரன், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் செந்தில் சேகர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 2022-23 ம் ஆண்டில் அதிக அளவில் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தியமைக்கு தென்காசி ஜே.பி. கல்லூரி மற்றும் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கலை கல்லூரிகள் முதல் இரண்டு இடங்களுக்கான விருதை பெற்றன. ஒரே ரத்ததான முகாமில் அதிக எண்ணிகையில் ரத்தம் வழங்கிய வகையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் அனைத்து ரத்ததான கூட்டமைப்புகளும் பாராட்டு சான்றிதழ்களை பெற்றன. மொத்தம் 75 தன்னார்வ குருதி கொடையாளர்கள் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி நிலையத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு விழாவில் கவுரவிக்கப் பட்டனர்.

விழாவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் ராஜேஷ், மூத்த மருத்துவர்கள் கீதா, லதா, விஜயகுமார், கார்த்திக் அறிவுடைநம்பி, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, முத்துலட்சுமி மற்றும் செவிலியர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர். தென்காசி குருதி நிலைய மருத்துவர் பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்