சாயர்புரம் போப் கல்லூரியில் ரத்ததான முகாம்
சாயர்புரம் போப் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.;
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி ஆகியவை இணைந்து ரத்த தானம் முகாமை நடத்தின. இந்த முகாமை போப் கல்லூரி முதல்வர் இம்மானுவேல் தொடங்கி வைத்தார். இதில் 50 மாணவ-மாணவிகள் ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் இளவரசி ஜெயமலர், தேசிய மாணவர் படை அதிகாரி ஜோன்ஸ் ராஜன், மருத்துவ கல்லூரி டாக்டர் சாந்தி, இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் தேவநேசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.