ரத்த தானம் முகாம்

செங்கோட்டை அருகே ரத்த தானம் முகாம் நடந்தது.

Update: 2022-11-11 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் அறிவுரையின் பேரில் இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கட்டளை குடியிருப்பு சேரிட்டி இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கற்குடி பஞ்சாயத்து தலைவா் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பாபு, புளியரை மருத்துவ அலுவலர் மோதி ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், செந்தில்குமார், கல்யாணசுந்தரம் மற்றும் ரத்த வங்கி பணியாளர்கள் முகாமை நடத்தினர்.

முகாமில் சேரிட்டி இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் சிவமுகேஷ்வேணு, செயலாளர் பிரம்மநாயகம் மற்றும் பஞ்சாயத்து தலைவர் உள்பட பலர் ரத்ததானம் செய்தனா். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்