உயிரிழந்தவர்களின் நினைவாக ரத்ததான முகாம்

உயிரிழந்தவர்களின் நினைவாக ரத்ததான முகாம் நடந்தது.

Update: 2023-06-21 20:15 GMT

ஊட்டி

ஊட்டியை சேர்ந்தவர் தாஜுதீன். இவர் ஊட்டியில் 17 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இந்தநிலையில் அவரது மகனும், ஆம்புலன்ஸ் டிரைவருமான தமீம், நண்பர் ஜஸ்டின் ஆகியோர் நண்பர்களுடன் திருச்சி மாவட்டம் துறையூருக்கு சென்றனர். அங்குள்ள பச்சமலை அருவியில் குளிக்க சென்ற போது தமீம், ஜஸ்டின் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக ஊட்டியில் உள்ள அவர்களது நண்பர்கள் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. முகாமை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தொடங்கி வைத்தார். 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து முகாம் ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், உயிரிழந்த தமீம், ஜஸ்டின் பெரிய அளவில் ரத்ததான முகாம் நடத்த வேண்டும் என திட்டமிட்டு இருந்தனர். அதற்குள் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. நேற்று முதல் கட்டமாக 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு உள்ளது என்றனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்