சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-09-09 19:24 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி சுங்கச்சாவடியில் அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட அவை தலைவர் வேல்முருகன், பொருளாளர் சக்திவேல், துணை செயலாளர் தெய்வசிகாமணி, தா.பழூர் ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், முருகானந்தம், உடையார்பாளையம் பேரூர் செயலாளர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்