குடிநீர் வழங்காததை கண்டித்து இரவில் சாலை மறியல்

கீழ்விஷாரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து இரவில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2022-09-21 17:03 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்விஷாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரவில் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கீழ்விஷாரம் குளத்துமேடு அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்