செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்து சாலை மறியல்

கொல்லங்கோடு அருகே செல்ேபான் கோபுரம் அமைப்பதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 89 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-26 19:03 GMT

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே செல்ேபான் கோபுரம் அமைப்பதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 89 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் கோபுரம்

கொல்லங்கோடு அருகே வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட சரல்முக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் ெசல்போன் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொண்டது. அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் செல்போன் கோபுரம் அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த 3 வாரங்களுக்கு முன் அந்த பகுதியில் செல்போன் கோபுரம ்அமைக்கும் பணி தொடங்கப்பட்ட போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில், நேற்று காலை 10 மணியளவில் சரல்முக்கு சந்திப்பு பகுதியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாைல மறியலில் ஈடுபட்டனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கை குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

போராட்டம் நடத்தியவர்களிடம் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறினர்.

கைது

இதனால் போராட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஐடன்சோனி, மற்றும் ஆண்கள், பெண்கள் என 89 பேரை போலீசார் ைகது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 89 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்