கிருஷ்ணகிரி: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 5 பேர் பலி
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
குடோனில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பட்டாசு வெடிவிபத்தில் குடோனுக்கு அருகே உள்ள 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், சில வீடுகளும் சேதமடைந்தன.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.