'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் நிறைவேறாது - கார்த்தி சிதம்பரம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார் .

Update: 2024-10-01 10:32 GMT

சென்னை,

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியதாவது,

கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை. அதை அரசியலோடு சேர்க்க கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதை வரவேற்கிறேன். காவிரி பிரச்சினையை தமிழகம், கர்நாடகம் மாநிலங்கள் சேர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகலாம். காவிரி பிரச்சினையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பாரதிய ஜனதா கூட்டணி அரசின் எண்ணம் நிறைவேறாது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பில்லை. சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை. தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்