பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு- முன்னாள் மத்திய மந்திரி

பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார்.

Update: 2022-07-09 22:19 GMT

சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய மந்திரி எம்.எம்.பல்லம் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிரவாதம் போன்ற முக்கிய தேசிய பிரச்சினைகளில் அரசியல் இருக்கக்கூடாது என்பதை காங்கிரஸ் கட்சி நம்புகிறது. பா.ஜ.க.வுக்கும் பயங்கரவாத செயல்களில் சிக்கியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உதய்பூர் கன்னையா லால் படுகொலை வழக்கில் பா.ஜ.க.வைச் சேர்ந்த முகமது ரியாஜ் அட்டாரி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 1999-ம் ஆண்டு நடந்த கந்தகார் விமான கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி மசூத் அஜாரை பா.ஜ.க. அரசு விடுதலை செய்தது. அஜார் சார்ந்திருந்த தீவிரவாத அமைப்பு தான் கடந்த 2001-ம் நடந்த நாடாளுமன்ற தாக்குதலுக்கும், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதற்கும் முழுப்பொறுப்பு. 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பல பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாண்டி எடுத்து வரப்பட்டுள்ளது. இது குறித்த மர்மம் நீடித்து வரும் நிலையில், புல்வாமா விவகாரத்தில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பேட்டியின்போது மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்