பா.ஜனதா இளைஞர் அணி பேரணி

கடையத்தில் பா.ஜனதா இளைஞர் அணியினர் பேரணி நடத்தினர்.;

Update: 2022-08-10 16:07 GMT

கடையம்:

கடையம் ஒன்றியம் (கிழக்கு- மேற்கு) பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பாக 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை (அமிர்த பெருவிழாவை) சிறப்பிக்கும் வகையி்ல தேசியக்கொடி ஏந்தி பேரணியாக சென்றனர். வந்தே மாதரம் கோஷத்துடன் கடையம் யூனியன் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பாரதியார் செல்லம்மாள் உருவச்சிலை அருகில் சென்றனர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தினகுமார், மேற்கு ஒன்றிய துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சிவமணிகண்டன், மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் சிவலிங்க செல்வன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, அமைப்பு சாரா மேற்கு ஒன்றிய தலைவர் பழனி, பட்டியலணி மாவட்டத் துணைத்தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்