பா.ஜனதா செயற்குழு கூட்டம்

செங்கோட்டையில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-15 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது. நகர தலைவா் வேம்புராஜ் தலைமை தாங்கினார். நகர பார்வையாளா் சீனிவாசன், பொதுச்செயலாளா் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பொதுச்செயலாளா் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளா் பாலகுருநாதன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும். அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கோட்டை வல்லம் ரோட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகர துணைத்தலைவா்கள் சுப்பிரமணி, பாலசுப்பிரமணி, சந்திரன், நகர செயலாளா்கள் முத்துமாரியப்பன், கணேசன், மாவட்ட ஓ.பி.சி. அணித்தலைவா் மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


Tags:    

மேலும் செய்திகள்