பா.ஜ.க. மகளிரணியினர் ஊர்வலம்

தஞ்சையில் பா.ஜ.க. மகளிரணியினர் ஊர்வலம் நடத்தினர்

Update: 2022-06-02 21:19 GMT

தஞ்சாவூர்

மத்திய பா.ஜ.க. அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-வது ஆண்டு தொடங்கி விட்டது. இதையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் தஞ்சையில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சை ரெயிலடியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட செயலாளர் பூமி செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி வரவேற்றார். இந்த ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக சென்று பழைய பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ், பொருளாளர் விநாயகம், மாவட்ட செயலாளர் அம்ரித்அரசன், நகர தலைவர்கள் ரமேஷ், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







Tags:    

மேலும் செய்திகள்