அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி; 88 பேர் கைது

குற்றாலத்தில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 88 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-11 18:45 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்தும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவை கைது செய்ய வலியுறுத்தியும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் குற்றாலத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு குற்றாலநாத சுவாமி கோவில் முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் குற்றாலம் பஸ் நிலையம் எதிரே பா.ஜ.க.வினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நெல்லை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நீலமுரளி யாதவ் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். 8 பெண்கள் உள்பட மொத்தம் 88 பேர் கைது செய்யப்பட்டு கலைவாணர் கலையரங்கில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்