பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று வருகை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று திண்டுக்கலுக்கு வருகை தருகிறார்.;

Update: 2023-09-11 23:30 GMT

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) திண்டுக்கல் மாவட்டத்துக்கு அவர் வருகிறார். பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானலில் மாலை நடைபயணம் மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மதியம் நிலக்கோட்டையிலும், மாலை ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளப்பட்டியிலும் நடைபயணம் மேற்கொண்டு பேசுகிறார்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் நத்தத்திலும், மாலை திண்டுக்கல்லிலும் நடைபயணம் மேற்கொள்வதோடு இரு இடங்களிலும் நடைபெறும் கூட்டங்களில் அண்ணாமலை பேசுகிறார். இதையடுத்து 15-ந்தேதி மதியம் வேடசந்தூரிலும், மாலை ஒட்டன்சத்திரத்திலும் நடைபயணம் செல்லும் அண்ணாமலை அங்கு நடைபெறும் கூட்டங்களில் பேசுகிறார். 16-ந் தேதி பழனி நகரில் மதியம் நடைபயணம் மேற்கொள்வதோடு, அங்கு நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5 நாட்கள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு, 7 தொகுதிகளிலும் நடக்கும் கூட்டங்களில் பேசுகிறார். இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடுகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்