அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரி பா.ஜ.க.வினர் மறியல்

அமைச்சர் சேகர் பாபு பதவி விலக கோரி மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட பா.ஜ.க.வினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-11 18:45 GMT

சிவகங்கை

அமைச்சர் சேகர் பாபு பதவி விலக கோரி மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட பா.ஜ.க.வினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதவி விலக கோரி

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்ற நிலையில் அவர் பதவி விலக கோரி பா.ஜ.க மாநில தலைவர் கெடு விதித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் பதவி விலகாத நிலையில் அவர் பதவி விலக கோரியும் சனாதனம் குறித்தும், இந்து மதம் குறித்தும் தவறுதலாக பேசிவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரியும் பா.ஜ.க.வினர் நேற்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்டதலைவர் மேப்பல் சக்தி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

150 பேர் கைது

இதைதொடர்ந்து அங்கேயே அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட 50 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்