பொன்மனையில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

தனியார் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்மனையில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

Update: 2022-10-30 20:42 GMT

குலசேகரம்,

பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட முள்ளம்வாளி என்ற இடத்தில் பாருடன் கூடிய தனியார் மதுக்கடை திறக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொன்மனை நகர தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். பொன்மனை பேரூராட்சி முன்னாள் தலைவி பிரசன்ன குமாரி முன்னிலை வகித்தார். பொன்மனை பேரூராட்சி துணைத்தலைவி அருள்மொழி, திருவட்டார் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் ராஜகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் வினோத், இளைஞர் அணி தலைவர் வக்கீல் கண்ணன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்