தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-27 13:23 GMT

ஆரணி

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆரணி அண்ணா சிலை அருகில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் போளூர் சி.ஏழுமலை தலைமை தாங்கினார்.

மாவட்ட பொது செயலாளர்கள் எம்.சரவணன், பி.முத்துச்சாமி, இ.முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி நகர தலைவர் வக்கீல் எஸ்.சரவணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.சி. மாநில தலைவர் ஆர்.எம்.சாய்சுரேஷ் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் சாசா.என்.வெங்கடேசன், ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் ஆர்.மோகனன்,

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழரசி, அன்பரசு, இளைஞரணி துணைத்தலைவர் புவனேஷ், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர்கள் நித்தியானந்தம், ஜி.கே.பிரபு, செல்வேந்திரன், அருள், பார்வதி, முனுசாமி, விநாயகம், ராஜலட்சுமி, தனசேகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் கே.ஜே.கோபாலன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்