பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை சென்னை வருகிறார்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு தனக்கு ஆதரவு திரட்டி வருகின்றார்.;
சென்னை:
ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவருமான திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அதன்படி திரவுபதி முர்மு அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னையில் 3 மணி நேரம் செலவிடும் அவர், தனியார் ஓட்டல் ஒன்றில் அ.தி.மு.க. கூட்டணி கட்சித்தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.