பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை

பூந்தமல்லி அருகே காரில் சென்ற பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2023-04-27 18:49 GMT

பூந்தமல்லி,

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் பி.பி.ஜி.சங்கர் (வயது 42). இவர் பா.ஜ.க. எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது காரில் டிரைவருடன் சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

காரில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார்.

வழிமறித்து தாக்குதல்

அப்போது திடீரென மர்ம கும்பல் வழிமறித்து காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. அப்போது காரில் இருந்து இறங்கி சங்கர் சாலையில் ஓடினார்.

அந்த மர்மகும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று ஓட, ஓட வெட்டி சாய்த்தனர். இதில் அவர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

15 வழக்குகள்

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சங்கரின் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்