பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை Meeting;

Update: 2023-07-02 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் வாணாபுரம் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஆன்மிகப்பிரிவு மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் பிரிவு மாநில தலைவர் டாக்டர் பிரேம்குமார் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகளில் மக்களுக்காக செயல்படுத்திய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியதோடு, ரிஷிவந்தியம் தொகுதியில் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஹரி, பொதுச்செயலாளர்கள் ஜெயதுரை, ராஜேஷ், முருகன், பொருளாளர் குமரவேல், ஒன்றிய தலைவர்கள் சுந்தர், சின்னதுரை, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்