பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரம், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது

பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-10-21 16:23 GMT

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் நேற்று அகற்றினர். இதனை அகற்றும்போது பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய தி.மு.க. அரசுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு முழுக்க 10 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், கொடிக்கம்பத்தை அகற்றும் போது, மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கைதான நிலையில், தற்போது அமர் பிரசாத் ரெட்டியும் கைதாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்