தண்டராம்பட்டில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

தண்டராம்பட்டில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-03-29 16:17 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் வி.தசரதன் கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு செயலாளர் தி.அறவாழி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், சேகர், மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், முருகன், மாவட்ட செயலாளர்கள், கிருஷ்ணமூர்த்தி, குமரன், ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்