மதுரையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது விவகாரம்: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் புகார்

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது விவகாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது

Update: 2022-12-12 20:03 GMT


மதுரையில் பா.ஜ.க. தேசிய தலைவர், செயலாளர் கைது விவகாரம் தொடர்பாக அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தமிழக கவர்னர், டி.ஜி.பி., தலைமை செயலாளர் உள்ளிட்ட பலருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் ஜமால்சித்திக், தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட பலர் மதுரையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய நாடு மத சார்பற்ற நாடு என்பதை நிரூபிக்கும் வகையிலும், சமத்துவத்தையும், சமாதானத்தையும் பரவ செய்யும் விதமாக அவர்கள் 2 பேரும் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களுடன் இந்து கோவில்கள், கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கு சென்று தேச ஒற்றுமைக்காக வழிபாடு செய்தனர். அவர்களை கோவில் நிர்வாகிகள் மற்றும் பாதிரியார்கள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தாங்கள் தழுவி வரும் கோரிப்பாளையம் தர்காவிற்கு வழிபாடு செய்ய செல்ல உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி அவர்களை அங்கு செல்ல அனுமதிக்க வில்லை. மேலும் அவர்களை புதூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கைது நடவடிக்கையும் மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறு செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்