ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து விமர்சனம் செய்ய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து விமர்சனம் செய்ய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;
புதுச்சேரி,
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் பாத யாத்திரை மற்றும் அவர் அணிந்து இருக்கும் டீ-சர்ட் குறித்து பொய்யான குற்றச்சாட்டை பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நாளைக்கு 3 முறை பிரதமர் மோடி உடை மாற்றும்போது ராகுல்காந்தி குறித்து விமர்சனம் செய்ய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை. ராகுல் காந்தி மீதான விமர்சனத்தை பாஜக தவிர்க்க வேண்டும். மேலும், ராகுல்காந்தி குறித்து துணை நிலை கவர்னர் தமிழிசை ஏளனமாக பேசினர்.
தெலங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி, அமைச்சர்கள் அவரை உதாசினப்படுத்துவதன் காரணமாக தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் இருந்து வருகிறார். தமிழிசை செளந்தரராஜன் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நல்ல மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.