ராகுல் காந்தி மக்களவைக்கு வரக்கூடாது என்று பாஜக இப்படி செய்துள்ளது: ஜோதிமணி எம்.பி ஆவேசம்

இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம் என்று ஜோதிமணி எம்.பி பேசினார்.;

Update:2023-03-24 15:36 IST

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த கரூர் மக்களவை தொகுதி எம்.பி ஜோதிமணி கூறியதாவது:-

ராகுல்காந்தி மக்களவை வந்து அதானி பற்றி பேசுகிறார். அதானியின் ஊழல் நாட்டை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ராகுல்காந்தி மக்களவை வரக்கூடாது, அவரது குரல் ஒலிக்கக்கூடாது என்று இப்படி செய்து உள்ளது. இதே போல 1922- ல் மகாத்மா காந்தி மீது தேச துரோக வழக்கு பொய்யாக போடப்பட்டது. அந்த வழக்கிற்கு இதே போல 2 ஆண்டுகாலம் தண்டனை விதித்தனர்.

அதில் இருந்து போராடி வெற்றி பெற்றார் மகாத்மா காந்தி. அது போல ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம்" இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்