பா.ஜ.க. கொடியேற்று விழா
சங்கரன்கோவில் அருகே பா.ஜ.க. கொடியேற்று விழா நடந்தது;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகா நகரில் பா. ஜனதா கட்சி சார்பில், கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான தீனதயாளன் பிறந்த தின விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, நகர தலைவர் கணேசன், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீனதயாளன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் நகர வர்த்தக அணி துணை தலைவர் சுப்பிரமணி, தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகராஜ், மகளிர் அணி தலைவி கற்பகசெல்வி, பொதுச்செயலாளர் நயினார், துணைத்தலைவர்கள் பெரியசாமி, மகேந்திரன், மத்திய அரசு நலத்திட்ட உதவி மாவட்ட செயலாளர் சித்திரை மாடசாமி, அமைப்பு சாரா ஒன்றிய தலைவர் சண்முகையா, நிர்வாகிகள் சிவன், திருமலைச்சாமி, மருதையா, சங்கரநாராயணன், கற்பகராஜ், சதீஷ்குமார், வண்ணராஜ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகையா நன்றி கூறினார்.