தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காதது, பெண்களுக்கு மாதம் ரூ.1,000உதவித்தொகை வழங்காதது, நாளுக்கு நாள் கொலை-கொள்ளைகள் அதிகரித்து வருவது, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யாமல் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்து கொண்டிருப்பது உள்ளிட்டவற்றிற்காக தி.மு.க.அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. இதில் பேராசிரியர் பி.கனகசபாபதி, பாண்டியன் ஆகியோர் போராட்ட உரையாற்றினர்.பா.ஜ.க. உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் ருத்திரக்குமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.