பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2022-12-26 19:57 GMT

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். விவசாய அணி மாநிலப் பொதுச் செயலாளர் பூண்டி வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள் ஜெய்சதீஷ் (தெற்கு), சதீஷ்குமார் (வடக்கு), பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், மருத்துவர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் தர்மதுரை உள்பட பலர் கையில் கரும்புகளுடன் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், பொங்கலுக்கு தமிழக விவசாயிகளிடம் இருந்து கரும்பு, தேங்காய், பனை வெல்லம் போன்ற விவசாய பொருட்களை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை தமிழக அரசு புறக்கணித்திருக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஆளும் தி.மு.க. அரசின் விவசாய விரோத போக்கை கண்டிப்பதுடன், பச்சரிசியை தமிழகத்திலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார். முடிவில் வடக்கு மாவட்ட தலைவர் அய்யப்பெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்