பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
முத்தையாபுரத்தில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தெற்கு மண்டல பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் முத்தையாபுரத்தில் நடைபெற்றது. தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். தெற்கு மண்டல பொதுச் செயலாளர் பிரபு, செயற்குழு உறுப்பினர் விந்தியா முருகன் ஜெயராம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், விவசாய அணி மாநில திட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளரும், தெற்கு மண்டல பார்வையாளருமான உமரி சத்தியசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தெற்கு மண்டல துணை தலைவர்கள் அருண் பாபு, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.