பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
பனப்பாக்கத்தில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் நெமிலி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொது செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற இன்று முதல் கடுமையாக உழைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றி, ஏரியின் உண்மையான பரப்பளவை அளவீடு செய்து அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் வளர்மதி, பொதுச் செயலாளர்கள் எழிலரசன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல திருமால்பூர் கிராமத்தில் நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்திற்கு நெமிலி மத்திய ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில மகளிர் அணி துணை தலைவர் கிருஷ்ணசாந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பா.ஜ.க.வில் பெண்களை அதிக அளவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும், கிராமங்கள் தோறும் பா.ஜ.க. கிளைகள் அமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு நலத்திட்ட மாநில செயலாளர் ஆனந்தன், ஊடகப் பிரிவு கார்த்திகேயன், மாவட்ட பட்டியல் அணி தலைவர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.