பா.ஜ.க. கவுன்சிலருடன் தி.மு.க. வாக்குவாதம்

பா.ஜ.க. கவுன்சிலருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-29 18:45 GMT

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் குமார், பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேச முயன்றார். அப்போது கவுன்சிலர்கள் முகமது ஜகாங்கீர், காதர்பிச்சை, ரமேஷ், ஸ்டாலின் உள்பட தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து குமார் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் குமார், தி.மு.க. கவுன்சிலர்களை விமர்சித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு குமார் மறுப்பு தெரிவித்ததால் மற்ற கவுன்சிலர்களுக்கும், பா.ஜ.க. கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. இந்த வாக்குவாதம் நீண்ட நேரம் நடந்ததால் தலைவர் கார்மேகம் அவர்களை அமைதிப்படுத்தினார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்