வீதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்: மாணவியின் கன்னத்தில் 'கேக்' தடவிய 4 பேர் கைது

ரோட்டில் நடந்து சென்ற மாணவியின் கன்னத்தில் பிறந்த நாள் கேக் தடவிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-05-25 04:41 IST

கோவை,

கொண்டாட்டம்....குத்தாட்டம்....குதுகலம் என்பது இருக்கட்டும்... ஆனால் அதில் எல்லை மீறும்போது தொல்லை தானே. என்னதான் நண்பர்கள், சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்தினாலும், கவனமாக இருக்க வேண்டும் அல்லவா...? உற்சாக மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் பிரச்சினை தானே. அது பற்றி பார்க்கலாம்:-

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள். இதனை மாணவி தடுத்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டாள்.

4 பேர் கைது

இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்