டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் விழா

Update: 2022-12-13 16:52 GMT


உடுமலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா, திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலை நகர அ.ம.மு.க.சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி உடுமலை நேரு வீதியில் உள்ள மகாத்மாகாந்தி உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், ரப்பர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து காளியம்மன் கோவிலில் அ.ம.மு.க.சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதைத்தொடர்ந்து உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்க பட்டது.

சி.சண்முகவேலு

இந்த நிகழ்ச்சிகளுக்கு அ.ம.மு.க. துணைபொதுச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான சி.சண்முகவேலு தலைமை தாங்கினார். உடுமலை நகர இணை செயலாளர் பனியன் துரை என்ற துரைசாமி, மாவட்ட வக்கீல் அணிசெயலாளர் பூமாறன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் இந்துராணி, நகர பொருளாளர் முத்துசாமி, பொதுக்குழு உறுப்பினர் குருவாயூரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில், மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கராமநல்லூர் பேரூராட்சி பகுதிகள் மற்றும் சாமராயபட்டி ஆகிய இடங்களில் நடந்த விழாக்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில், மடத்துக்குளம் செங்கழனி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படடது. இந்நிகழ்ச்சிகளில் துணைபொதுச்செயலாளர் சி.சண்முகவேலு, அ.ம.மு.க. ஒன்றிய மற்றும் பேரூராட்சி பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்