நந்தியம்பெருமான் பிறப்பு பெருவிழா

நந்தியம்பெருமான் பிறப்பு பெருவிழா;

Update: 2023-03-29 20:38 GMT

திருவையாறு அந்தணர் குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியம்பெருமானை வழிபட்டனர். அதனை தொடர்ந்து மாலை அய்யாறப்பர் கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இன்று(வியாழக்கிழமை) காலை 5.30 மணியளவில் அய்யாறப்பர் அம்பாள், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழாபாடிக்கு செல்கிறது. அரியலூர் மாவட்டம் திருமழாப்பாடியில் இரவு வைத்தியநாதன்சாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். பிறகு சாமி புறப்பட்டு திருவையாறு வந்தடையும். விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் உத்தரவின்பேரில் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்