10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் உள்பட 10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் நடக்கிறது.

Update: 2023-01-28 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் சரணாலயம் உள்பட 10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் நடக்கிறது.

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதியில் ஆண்டு முழுவதும் அதிகளவில் பறவைகள் காணப்படும்.

குறிப்பாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு வெளிமாநில, வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிக அளவில் இருக்கும். மற்ற நாட்களிலும் உள்நாட்டு பறவையினங்கள் காணப்படும். இந்த நிலையில் இப்பகுதிகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

பறவைகள் கணக்கெடுப்பு பணி

அதன்படி திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சதீஸ், மாவட்ட வன அலுவலர் அறிவொளி ஆகியோர் மேற்பார்வையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.இதில் முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனி மற்றும் வனத்துறையினர், பறவைகள் ஆராய்ச்சியாளர் பாலசந்திரன் தலைமையிலான 10 குழுக்களாக பிரிந்து மொத்தம் 50பேர் கொண்ட குழுவினர் கடற்கரை சார்ந்த ஈரநில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை அலையாத்திகாடு பகுதிகளிலும், தொண்டியகாடு பகுதிகளிலும், கோபாலசமுத்திரம் வயல்வெளி, மங்கலூர் ஏரி, கிழக்கு கடற்கரை சாலை, மருதங்காவெளி குட்டைகள், துறைக்காடு, மரவாக்காடு, வடக்காடு, கரிக்காடு ஆகிய வனப்பகுதிகள், பரக்கலக்கோட்டை அமிரி குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இன்றும் நடக்கிறது

இந்த கணக்கெடுப்பு பணியில் மயிலாடுதுறை பகுதியில் உள்ள கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வனகுழு உறுப்பினர்கள், உயிர்ப்பன்மை மேலாண்மை குழு உறுப்பினர்கள், வனப் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர். இந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்