வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.;

Update: 2023-09-27 18:45 GMT

திருக்கோவிலூர் 

திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.75 ஆயிரத்து 503 வசூல் ஆனது தெரியவந்தது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலா் அருள், சரக ஆய்வாளர் பாக்கியலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரேவதிஜெகதீஷ், எழுத்தர் மிரேஷ்குமாா் ஆகியோர் கலந்துகொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்