ரூ.5½ லட்சம் உண்டியல் காணிக்கை
பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவிலில் ரூ.5½ லட்சம் உண்டியல் காணிக்கை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பாலக்கோடு
பாலக்கோட்டில் புதூர்மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. இதில் 12 ஊர் கிராம மக்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இதையடுத்து நேற்று அறநிலையத்துறை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 258 மற்றும் 31 கிராம் தங்கம், 900 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது. இதையடுத்து காணிக்கையாக கிடைத்த பணம், நகை பாலக்கோடு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.