இருதரப்பினர் மோதல்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாசுதேவநல்லூரில் இருதரப்பினர் மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;

Update: 2022-12-06 19:34 GMT

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது இதனை வேடிக்கை பார்க்க வந்த இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் வாலிபர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த அவர் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே இச்சம்பவத்தை கண்டித்து, காயம் அடைந்த வாலிபாின் உறவினர்கள், பஸ்நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையொட்டி அங்கு கடைகளும் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்