இரு தரப்பினர் மோதல்; 4 பேர் கைது

புளியரை அருகே இரு தரப்பினர் மோதலில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-03 19:38 GMT

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் புளியரை அருகே தமிழக- கேரள எல்லை பகுதியில் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது சாமி கும்பிடுவது தொடர்பாக புளியரை தெற்குமேடு, தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விறகு கட்டைகளால் தாக்கினர். இதனால் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதில் காயமடைந்த 6 பக்தர்களில் 2 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியரை சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், தெற்குமேடு, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த தலா 6 பக்தர்கள் மீது புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த சிபி (வயது 27), கோபிராஜ் (21), ராஜா (21), சுப்பிரமணியன் (34) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 8 பேரை தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்