தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Update: 2023-01-09 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் பாலாஜி (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளை தர்மபுரியில் உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்துவிசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்