பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை - பீகாரை சேர்ந்தவர் கைது
பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகாரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை ஜாம்பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தியாகராயநகர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜாம்பஜார் மீரான் சாகிப் தெருவில் உள்ள பீடா கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரா யாதவ் (வயது 41) கஞ்சா போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், பீடா கடை போர்வையில் கஞ்சா போதை சாக்லேட்டுகளை மாணவர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இவரிடம் கஞ்சா சாக்லேட்டுகள் வாங்கியவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர்.